மானாமதுரை நகர் கழகச் செயலாளர் பொன்னுசாமி அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 April 2026

மானாமதுரை நகர் கழகச் செயலாளர் பொன்னுசாமி அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா.


 மானாமதுரை நகர் கழகச் செயலாளர் பொன்னுசாமி அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா. 



சிவகங்கை மாவட்டம் மானாமதுரை திராவிட முன்னேற்ற கழகத்தின் நகரக் கழகச் செயலாளர் பொன்னுசாமி அவர்களின் 65வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மானாமதுரை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த திமுக மற்றும் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், பிரமுகர்கள், அனைத்து சார்பு அணியினர், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பொன்னுசாமி அவர்களை அவரது வீட்டில் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தியும், நினைவு பரிசுகள் வழங்கியும், புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பொன்னுசாமி அவர்கள் சுமார் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திமுக கட்சியிலும், சுமார் 35 வருடங்களுக்கு மேலாக நகர கழக செயலாளராக தொடர்ந்து பொது சேவையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad