பாபா மெட்ரிக் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைபெறுதல் நிகழ்ச்சி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் தனியார் பள்ளியான பாபா மெட்ரிக் பள்ளியில் 2025-26 கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விடைபெறுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளியின் நிறுவனர் திருமதி இராஜேஸ்வரி அம்மா, தாளாளர் திரு ஆர். கபிலன் மற்றும் பள்ளி நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா அவர்கள் மாணவர்களுடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இவ்விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். கடந்த 12 ஆண்டுகளாக தங்களது குழந்தைகளை பாபா மெட்ரிக் பள்ளியில் கல்வி கற்க வைத்த பெற்றோர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறந்த மாணவர்களாக உருவாக்கியமைக்காக பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி செலுத்தியும், ஆசிரியர்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்தியும் சென்றனர். மாணவர்களுக்கு மறக்க முடியாத நினைவாக இந்த விடைபெறுதல் நிகழ்ச்சி பாபா மெட்ரிக் பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

No comments:
Post a Comment