மானாமதுரை, ஜன.24:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்திற்குட்பட்ட மூங்கில்ஊரணி அரசு உயர்நிலைப் பள்ளியில், ஜனவரி 23-ம் தேதி முற்பகல் 11 மணியளவில் “தமிழ்க் கூடல் விழா” வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சி. ஆரோக்கியராஜா அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தமிழாசிரியரும், பட்டிமன்ற நடுவரும், கிராமியப் பாடகருமான வே. தெய்வேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு, “தமிழே! உயிரே! உணர்வே!” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அவரது கருத்து செறிந்த உரை, பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அனைவரிடமும் தமிழ் மொழி மீதான பற்றையும் உணர்வையும் மேலும் வளர்க்கும் வகையில் அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் விழாவிற்கு சிறப்புச் சேர்த்தன. இவ்விழா சிறப்பாக நடைபெற, பள்ளியின் ஆசிரியர்கள் முழுமையான முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்.
நிகழ்ச்சியை தமிழ் ஆசிரியை கோல்டா மேயர் அவர்கள் தொகுத்து வழங்கினார். விழாவின் நிறைவாக, பள்ளியின் கணித ஆசிரியர் த. கணேஷ் ராஜா அவர்கள் நன்றியுரை ஆற்றி, “தமிழ்க் கூடல் விழா” இனிதே நிறைவடைந்தது.
.jpg)
No comments:
Post a Comment