மானாமதுரை ரயில்வே காலணியில் இயங்கி வரும் துணை அஞ்சலகத்தை மூடுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 January 2026

மானாமதுரை ரயில்வே காலணியில் இயங்கி வரும் துணை அஞ்சலகத்தை மூடுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு


 மானாமதுரை ரயில்வே காலணியில் இயங்கி வரும் துணை அஞ்சலகத்தை மூடுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மானாமதுரை டவுன் இரயில்வே காலனியில் இயங்கி வரும் துணை அஞ்சலகத்தில் SB, RD, SSA, RLP, PLI போன்ற அஞ்சலக கணக்குகள் சுமார் 1000-த்திற்கும் மேல் வரவு-செலவு நடைபெற்று வருகிறது. ரயில்வே காலனி பகுதியில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். 


மேற்படி துணை அஞ்சலகம் சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில், மதுரை மண்டல அஞ்சலக அலுவலகத்திலிருந்து மேற்படி ரயில்வே காலனியில் செயல்பட்டு வரும் அஞ்சலகத்தை மானாமதுரை தலைமை அஞ்சல் அலுவலத்தோடு இணைக்க தற்காலிக உத்தரவு வந்துள்ளது. 


இதனால் ரயில்வே காலனி பகுதியில் உள்ள பொதுமக்கள் மானாமதுரை தலைமை அஞ்சலகத்திற்கு செல்ல வேண்டியது சூழ்நிலை ஏற்படும். 3 கி.மீ துாரம் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு செல்ல பஸ், ஆட்டோ பிடித்து செல்லும் நிலை உள்ளது. 


வயதானவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் மேற்படி ரயில்வே காலனி RS SO-வை தொடர்ந்து அங்கேயே செயல்பட உதவிடுமாறு அப்பகுதி பொதுமக்கள் சார்பாக தென்மண்டல முதன்மை அஞ்சலக அலுவலருக்கு மனு அளித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad