திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள கிறிஸ்துராஜா பதின்ம மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பத்தூர் கிளை மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் முனைவர் கோபிநாத் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். மாவட்டத் துணைத்தலைவர் அரிமா பாபா அமீர் பாதுஷா மற்றும் கிறிஸ்துராஜா பதின்ம மேல்நிலைப்பள்ளி நிறுவனர் விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் சேகர் அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி, அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சமூகத்தில் அறிவியல் சிந்தனையை வளர்ப்பதன் அவசியம் குறித்து நோக்க உரையாற்றினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களுக்கு விஞ்ஞான துளிர் மற்றும் புத்தகங்கள் நினைவு பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பத்தூர் கிளையின் புதிய நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி அவர்களால் முன்மொழியப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.
-
கிளைத் தலைவர்: விக்டர்
-
கிளைச் செயலாளர்: மெஹர்பானு
-
கிளைப் பொருளாளர்: செந்தாமரைச் செல்வி
-
துணைத் தலைவர்: ஸ்ரீதர் ராவ்
-
துணைச் செயலாளர்: முத்துக்குமரன்
மாநாட்டில் அப்சா கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் பாலசிவ சங்கர், முனைவர் இளையராஜா, பேராசிரியர் முனைவர் கருணாகரன், காரைக்குடி கிளைச் செயலாளர் டென்சிங் அருள்ராஜ், பொதிகை கோவிந்தசாமி, ஆசிரியர் செந்தமிழ் செல்வி, வானவில் மன்ற கருத்தாளர்கள் தனலெட்சுமி, புஷ்பவள்ளி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக செயற்குழு உறுப்பினர் இராஜயோகம் நன்றி கூறினார்.
.jpeg)
No comments:
Post a Comment