காரைக்குடி, டிச. 20:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில், காரைக்குடி புகைப்பட கலைஞர்கள் நல சங்கம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி காரைக்குடி தேவர் சிலையிலிருந்து தொடங்கி, நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று காரைக்குடி பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற அனைத்து புகைப்படக் கலைஞர்களும் ஹெல்மெட் அணிந்து, பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை இயக்கும் போது கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும், விபத்துகளை தவிர்க்க வேண்டும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களை எடுத்துச் சென்றனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியை ஆசீஸ் புனியா, காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் (IPS), கொடி அசைத்து துவங்கி வைத்தார். சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பில் ஹெல்மெட் பயன்பாட்டின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

No comments:
Post a Comment