காரைக்குடி:
செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளி சார்பில் 15-ஆம் ஆண்டு தடகள மற்றும் விளையாட்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவர் சு. செல்லப்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் செ. சத்தியன் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக ஆஷிஷ் புனியா, உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP), சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் கல்வி இயக்குநர் திருமதி ராஜேஸ்வரி, முதல்வர் திரு சங்கரசுப்ரமணியம், துணை முதல்வர் திருமதி சுபாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் துவக்கத்தில் முதல்வர் திரு சங்கரசுப்ரமணியம் வரவேற்புரை ஆற்றினார். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றுக் கொண்டு, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.
மழலையர் பிரிவு முதல் உயர்நிலை மாணவர்கள் வரை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்களின் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். தற்காப்புக் கலைகள், சிலம்பம், பிரமிட், ரோலர் ஸ்கேட்டிங் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பெரும் பாராட்டைப் பெற்றன.
விழாவின் நிறைவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றன. இறுதியாக துணை முதல்வர் திருமதி சுபாஷினி நன்றியுரை ஆற்றினார்.

No comments:
Post a Comment