பெடரேசன் ஆப் ஆல் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு & பாண்டிச்சேரி சார்பாக சிவகங்கை மாவட்ட துணை ஆட்சியரிடம் மனு.
தமிழகத்தில் இயங்கி வரும் "பெடரேசன் ஆப் ஆல் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு & பாண்டிச்சேரி" என்று அழைக்கப்படும் 'தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின்' மாநில தலைவர் பொறியாளர் டி. எஸ். பிரபு மற்றும் மாநிலச் செயலாளர் பொறியாளர் என். துரைக்கண்ணன் ஆகியோரின் வழிகாட்டுதல் & ஒப்புதலின் பேரில் குஜராத் மற்றும் கர்நாடக மாநிலத்தில் "கட்டிட பொறியாளர் கவுன்சில்" உருவாக்கப்பட்டது போல் தமிழ்நாட்டிலும் கட்டிட பொறியாளர் கவுன்சில் ஏற்படுத்திட உள்ளிட்ட கட்டுமான பொறியாளர்களின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு கடிதம் மூலமாக பரிந்துரைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தப்பட்டள்ளது.
அதில் 1.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கங்களில் கூட்டமைப்பானது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 97 கட்டடப் பொறியாளர் சங்கங்களை உள்ளடக்கியது. 97 சங்கங்களிலும் சேர்த்து மொத்தம் 25,000 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பட்டம் பெற்ற பொறியாளர்கள் மற்றும் சுயதொழில் புரிபவர்கள்.
2. 2021 திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையின் பக்கம் 65-ல் வரிசை எண் 471-இல் தாங்கள் அறிவித்துள்ளது போல தமிழகத்தில் கட்டடப் பொறியாளர்கள் கவுன்சில் அமைத்து இந்திய அரங்கில் தமிழகத்திற்கு தனித்தன்மைக்கு உள்ள பெருமை சேர்த்திடும் வகையில் நிறைவேற்றித் தரும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
3. இதன் காரணமாக முதல் முதலாக குஜராத் மாநிலம் 2006 ஆம் ஆண்டு மற்றும் THE KARNATAKA PROFESSIONAL CIVIL ENGINEER ACT, 2024 அவர்கள் மாநிலத்திற்கு என ஒரு கட்டட பொறியாளர் கவுன்சிலை உருவாக்கி செயல் வடிவம் கொடுத்து உள்ளனர்.
4. ஒரு பொறியாளர்களின் பதிவு REGISTERED ENGINEER இடத்தில் பதிவு செய்தால் மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பதிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறும், மாநிலம் முழுவதும் ஒரே பதிவு நடைமுறையை ஏற்படுத்தித்தர கோரிக்கை. 5. பொறியாளர்களின் பதிவு REGISTERED ENGINEER ஒரு முறை பதிவு செய்தால் ஆயட்காலம் வரை செல்லத்தக்கதாகவும், மேலும் பதிவினை புதுப்பித்தல் அவசியமில்லை என்ற நடைமுறையை நடைமுறைப்படுத்தி தர கோரிக்கை.
6. (SELF DECLARATION) சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்குவதில், பொறியாளர்கள் வரைபடம் தயார் செய்யவும், கையெழுத்து செய்யவும் நடைமுறையை மாற்றாமல் (G.O.No:133, Dt.18.07.2024)-ன்படி தொடர வேண்டுமாய் மேலும் பொறியாளர்களுக்கு OTP வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சிவகங்கை மாவட்ட துணை ஆட்சியரிடம் 'பெடரேசன் ஆப் ஆல் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு & பாண்டிச்சேரி' சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் செயலாளரின் ஒப்புதலோடு பரிந்துக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மண்டலத்தில் உள்ள சங்கத்தினர் மனு அளித்தனர்.

No comments:
Post a Comment