முப்பெரும் தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மானாமதுரை நகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக கபடி போட்டி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் முப்பெரும் தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மானாமதுரை நகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக நகரத் தலைவர் நமக்கோடி அவர்களின் தலைமையில் கபடி போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி (எ) மெய்யநாதன் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
இதில் வட்டாரத் தலைவர் ரவி, மானாமதுரை நகர மற்றும் வட்டாரங்களைச் சேர்ந்த பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். நடைபெற்ற இந்த கபடி போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து கபடி அணிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்ட நிலையில், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்க பணம் விழா கமிட்டி சார்பாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment