மானாமதுரை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் கோயில் அருகில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் கோயில் அருகில் நேற்று இரவு 11 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் TN63BM5965 என்ற வண்டி எண் கொண்ட கருப்பு நிற பல்சர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் விபத்தில் பலியானவரின் உடலை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தில் மற்றொருவர் வந்துள்ளாரா, எவ்வாறு இந்த விபத்து நடந்தது, உயிரிழந்தவரின் விபரங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சந்தேகத்தின் பேரில் ஒருவரை காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment