தேவகோட்டை நகராட்சியில் சாதாரண நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நகர் மன்றத்தின் சாதாரண கூட்டம் நகராட்சியில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. தினசரி காய்கறி மார்க்கெட் ஒருமனதாக வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு இசைந்த வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும், நகர் மன்ற உறுப்பினர்களுக்கும் நகர்மன்ற தலைவர் நன்றி தெரிவித்தார். வியாபாரிகளுக்கு என்றும் நாம் துணை நிற்போம், நம்மால் இயன்ற அளவு நகராட்சி மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்லதை செய்வோம் என்று உறுதி அளித்தார்.
நகராட்சி அஜந்தாவில் வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. மேலும் நகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டு சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பினர். 24 வது வார்டில் வீடுகளில் வைத்து பன்றிகள் வழங்கப்படுகின்றன, அவற்றின் கழிவுகள் சாக்கடைகளில் வருகிறது சுகாதாரக் கேடாக உள்ளது என்றும், நித்திய கல்யாணிபுரம் துர்க்கை அம்மன் கோவில் அருகில் உள்ள காலியாக உள்ள இடத்தில் கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளது. அங்கு மாலை நேரத்தில் வேண்டத்தகாத சில செயல்கள் இளைஞர்களால் நடைபெறுவதாகவும், அந்த இடத்தை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தரவேண்டும் என்றும், பத்தாவது வார்டு நடுநிலைப் பள்ளிக்கு அருகில் கட்ட வேண்டிய கால்வாய் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டது.
உடனடியாக அதற்கு தீர்வு காணப்படும் என நகர் மன்ற தலைவர் மற்றும் பொறியாளர் தெரிவித்தனர். 13 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்துவதில் பெரிய பொருட்செலவு நகராட்சிக்கு ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். பதினாறாவது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும் மழை நேரம் என்பதால் மரங்கள் சாய்ந்தால் அருகில் உள்ள பள்ளிக்கூட கட்டிடம் மற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. நியாய விலைக் கடைகளில் வயதானவர்களுக்கு ரேகைகள் சரியாக விழுகாததால் அவர்கள் நாள் முழுவதும் காத்திருந்து பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது, அதற்கு நகராட்சி சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
தேவகோட்டை மின் மயானம் செயல்படாமல் உள்ளது பழுதடைந்த பொருட்களை சரி செய்து மீண்டும் மயானம் தொடர்ந்து செயல்பட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். எரியாத தெரு விளக்குகளை உடனடியாக சரி செய்ய நகராட்சியில் பணியாளர்களைப் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்டது போன்ற முக்கியமான பொதுமக்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment