மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக "ஓட்டுத் திருட்டுக்கு" எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட கடந்த கால தேர்தல்களில் ஓட்டு திருட்டு முறைகேடுகள் நடந்துள்ளதை வெட்ட வெளிச்சமாக காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும், இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல் காந்தி அவர்கள் தான் சேகரித்த வாக்கு திருட்டு தொடர்பான முறைகேடு தகவல்களை பத்திரிகையாளர்களிடமும், இந்திய ஜனநாயக திருநாட்டு மக்களிடமும் பகிர்ந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி அவர்களின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கும் விதமாக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளித்து வரும் நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியானது வாக்குத்திருட்டு இருக்கு எதிராக 5 கோடி கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி ராகுல் காந்தி அவர்களின் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டிற்கு ஆதரவாகவும் வலு சேர்க்கும் விதமாகவும் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் காந்தி அவர்களின் முன்னிலையிலும், நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நகர் மன்ற உறுப்பினர் புருஷோத்தமன் அவர்களின் தலைமையிலும் மானாமதுரை நகர் பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வட்டாரத் தலைவர்கள் காசி ராமலிங்கம் மற்றும் பாண்டிவேல், வழக்கறிஞர் முத்துக்குமார், மாவட்ட இணைச் செயலாளர் காசி, வார்டு தலைவர்கள் ராம்கி, நாகூரம்மாள், நாகவள்ளி, ஞானதீபன் மற்றும் ஆறுமுகம், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் லிவிங்ஸ்டன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment