27 & 31-ஆம் தேதிகளில் மாவட்ட ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முதன்மை கல்வி அலுவலருக்கு ஆட்சியர் பரிந்துரை.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், மருதுபாண்டியர்களின் 224-வது நினைவு நாள் நிகழ்ச்சி மற்றும் இராமநாதபுரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா அனுசரிப்பதை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் வகையில் பேருந்து வழித் தடத்தினை மாற்றி அமைத்தும், மாவட்டம் முழுவதும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, மாணவ/மாணவியரின் பாதுகாப்பு நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எதிர்வரும் 27.10.2025 மற்றும் 30.10.2025 ஆகிய தேதிகளில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையினை அளித்து, அதற்கு பதிலாக வேறு ஒரு நாளில் பள்ளிகள் இயங்குவதற்கு மாற்று ஏற்பாட்டினை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கடிதம் மூலம் பரிந்துரைத்துள்ளார்.

 
 
No comments:
Post a Comment