மானாமதுரையில் உள்ள ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு, ஒரு வாரத்தில் திறப்பதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை - மதுரை தேசிய நான்கு வழி நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் உள்ள மானாமதுரை - ராஜகம்பீரம் ரயில்வே கேட் எண்-33 இங்கி வருகிறது. இதற்கிடையில் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் இக்குறிப்பிட்ட ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்து, சாலையின் போக்குவரத்தை இருபுறமும் தடுத்து நிறுத்திய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அம்முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே தண்டவாளத்தில் முற்றுகையிட்டனர். இந்நிலையில் மானாமதுரை ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் சாலையானது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் இவ்விவகாரம் குறித்து அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டம் மானாமரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர் என்பதும், மூடப்பட்ட சாலையை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்த விடுமாறு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment