சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைகான சிலம்ப போட்டியில் மானாமதுரை மாணவி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை.
சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைகான சிலம்ப போட்டியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் வீரவிதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் அறக்கட்டளை மாணவி ஜெயஸ்ரீ வெள்ளி பதக்கம் மற்றும் ரூபாய் 75 ஆயிரத்திற்கான காசோலை பெற்று வீரவிதை சிலம்ப அகாடமிக்கு இரண்டாவது முறையாக பெருமை சேர்த்துள்ளார். வெள்ளிப் பதக்கம் வென்ற மனைவி ஜெயஸ்ரீக்கு வீரவிதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் அறக்கட்டளை தலைவர் மாஸ்டர் கலைவளர்மணி டாக்டர் கே. பெருமாள், பெற்றோர், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வெகுவாக பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment