சிவகங்கையில் சிறு மின்விசை பம்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சின்டெக்ஸ் டேங்கினை திறந்து வைத்த நகர மன்ற தலைவர்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டில் சிறு மின்விசை பம்புத் திட்டம் 2025-26 கீழ் புதிதாக கட்டப்பட்ட நீர் சேமிப்பு தொட்டியான சின்டெக்ஸ் டேங்கினை வார்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர் சி. எம். துரை ஆனந்த் அவர்கள் நகர்மன்ற தலைவர் இரா. ஜெயா ஜெனிபர் ராபர்ட் முன்னிலையில் திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர், ஒப்பந்ததாரர் பாண்டியராஜன், நகராட்சி பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment