தரமற்ற தார் சாலை போடப்பட்ட விவகாரம் தொடர்பாக நகராட்சி பொறியாளரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி துணை தலைவர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தார் சாலைகள் போடப்பட்டு வருகிறது. போடப்பட்ட இந்த தார் சாலையானது அரசு நிர்ணயித்துள்ள கன அளவு உயரம் இல்லை என பல்வேறு வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக போடப்பட்டு தார் சாலை கைகளால் கூட பெயர் தடுத்து விட முடியும் என்ற நிலையிலும், மிக மோசமான மற்றும் தரமற்ற முறையில் உள்ளதாகவும் அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது வார்டு பகுதிகளில் தரமற்ற தார் சாலை அமைத்ததை கண்டித்து வெகுண்டெழுந்த மானாமதுரை நகராட்சி துணைத் தலைவர் பாலசுந்தரம் நகராட்சி பொறியாளர் பட்டுராஜனை வன்மையாக கண்டித்து, பொறியாளரின் அறைக்கு எதிராக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர்.
செய்தியாளர்களிடம் பாலசுந்தரம் கூறியதாவது, நகராட்சி பொறியாளர் வேண்டுமென்றே ஆளும் திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும், தனது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தி தேர்தலில் தன்னை ஓட்டு கேட்க விடாமல் தடுக்கும் முயற்சியாக பொறியாளர் செயல்படுவதாகவும், எனவே நகராட்சி பொறியாளரை பணிநீக்கம் செய்யமாறு வெளிப்படையான தனது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மேலும் தான் நேர்மையாக செயல்பட்டு வருவதாகவும், தரமற்ற தார் சாலை போடப்பட்டது குறித்து பொறியாளரிடம் விளக்கம் கேட்டபோது மக்கள் பிரதிநிதியான தனக்கு தகுந்த பதில் அளிக்காமல், தான் ஒரு அரசு சம்பளம் வாங்கும் அரசு அதிகாரி என்பதையும், பொதுமக்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகுந்த விளக்கம் அளிக்கும் பொறுப்பு தனக்கு உள்ளதை மறந்து நகராட்சி பொறியாளர் தான் மேற்கொள்ளும் பணியில் மெத்தன போக்குடன் செயல்பட்டுவதை தன் சார்பாகவும் தன் வார்டு பொதுமக்கள் சார்பாகவும் வன்மையாக கண்டிப்பதாக தனது வன்மையான குற்றச்சாட்டை நகராட்சி பொறியாளருக்கு எதிராக பதிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment