அழகப்பா பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் மரக்கன்று நடுதல் நிகழ்வு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறை மாணவர்கள் மற்றும் காரைக்குடி சுப்ரீம் அரிமா சங்கம் & காரைக்குடி டாக்டர் அழகப்பர் சயின்ஸ் சிட்டி அரிமா சங்கம் இணைந்து நடத்திய கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் சுகாதாரம் பற்றிய விழிப்புணர் ஏற்படுத்தியதோடு, 50 இலவச மரக்கன்றுகளை நடவு செய்து அம்மரக்கன்றுகளை தொடர்ந்து பாதுகாக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் இயற்பியல் துறை தலைவர், காரைக்குடி சுப்ரீம் அரிமா சங்க தலைவர் லயன் அருண் போஸ், செயலாளர் லயன் ஏ. ஆர். எஸ். பாண்டியன், சயின்ஸ் சிட்டி அரிமா சங்கத்தின் நிர்வாகி லயன் கோபால கிருஷ்ணன், லியோ கிளப் தலைவர் செல்வன், மனோஜ் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment