மானாமதுரை - ராஜகம்பீரம் இடையே மூடப்பட்ட ரயில்வே கேட்டை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை - மதுரை தேசிய நான்கு வழி நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் உள்ள மானாமதுரை - ராஜகம்பீரம் ரயில்வே கேட் எண்-33 நிரந்தரமாக மூடப்படுவதை எதிர்த்து கடந்த வாரம் பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கடிதம் மூலம் ரயில்வே கேட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், நிரந்தரமாக மூடுவதை கைவிடவும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில் மூடப்பட்டுள்ள ரயில்வே கேட்டை பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டு, கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது நகர் கழக செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் காந்தி, நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் புருஷோத்தமன், வார்டு உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர், அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அட்டையினை வழங்கிய பின்னர், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment