திருவனந்தபுரத்தில் இருந்து ராமேசுவரம் வரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் நீட்டிப்பு.
மதுரை ரயில் சந்திப்பிலிருந்து அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயிலானது திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் வழித்தடத்தில் பயணித்து வந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக இந்த ரெயிலை மானாமதுரை வழியாக ராமேசுவரம் வரை நீட்டிப்பு செய்ய ரெயில்வே வாரியம் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒப்புதல் வழங்கியது.
அதனை தொடர்ந்து இந்த ரெயில் உரிய நேர மாற்றங்களுடன் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்து இயக்கப்பட்டது. இந்நிலையில் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை சந்திப்பு வந்தடைந்த நிலையில், ரயிலை வரவேற்கும் விதமாக மானாமதுரை பாஜக நகர தலைவர் முனியசாமி (எ) நமக்கோடியின் தலைமையில் முன்னாள் சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி (எ) சத்தியநாதன் ரயிலை இயக்கும் லோக்கோ பைலட் ஆகியோருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வில் மானாமதுரை பாஜக கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment