மானாமதுரையில் வயல்வெளிகளில் சாய்ந்த மின் கம்பங்களால் விவசாயிகள் பீதி, நடவடிக்கை எடுக்குமா மின்வாரியத்துறை? - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 October 2025

மானாமதுரையில் வயல்வெளிகளில் சாய்ந்த மின் கம்பங்களால் விவசாயிகள் பீதி, நடவடிக்கை எடுக்குமா மின்வாரியத்துறை?


மானாமதுரையில் வயல்வெளிகளில் சாய்ந்த மின் கம்பங்களால் விவசாயிகள் பீதி, நடவடிக்கை எடுக்குமா மின்வாரியத்துறை?


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வயல்வெளிகளில் சாய்ந்த மின் கம்பங்களால் மின்கம்பிகள் தாழ்வாக தொங்குவதால் அப்பகுதியில் விவசாயப் பணிகளை சரிவர மேற்கொள்ள முடியாமல் மிகுந்த அச்சத்திலும், மரண பயத்திலும், பீதியிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


மானாமதுரை புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் மற்றும் அப்பகுதியில் உள்ள சினிமா தியேட்டர்களின் பின்புறம் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்பகுதியில் பெய்த மழையை வைத்து ஏராளமான விவசாயிகள் நெல் விதைகளை விதைத்துள்ளனர். தற்போது அவை முளைத்து வருகிற நிலையில், இப்பகுதியில் செல்லும் ஏராளமான மின் கம்பங்கள் கரிசல் மண் என்பதால் பாரம் தாங்காமல் சாய்ந்த நிலையில் உள்ளதால் மின் கம்பிகள் ஏராளமான இடங்களில் மிகவும் தாழ்வாக கைகளுக்கு எட்டும் அளவு தொய்வாக அபாயகரமான சூழ்நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகி வருவதாகவும் தெரியவருகிறது. 


இது குறித்து விவசாயிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது, "இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் 15க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளதால் மின் கம்பிகளும் மிகவும் தாழ்வாக தொட்டுவிடும் தூரத்தில் உள்ளது. இதனால் அதற்கு கீழ் பகுதியில் பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. தற்போது விதை நெல்கள் முளைத்து வருகிற நிலையில் அடுத்தடுத்து பணிகளை செய்ய வேண்டிய நிலையில் விவசாய வேலை செய்பவர்கள் மின் கம்பிகளை காரணம் காட்டி மிகுந்த அவதிக்குள்ளாகி வேலைக்கு வர மறுக்கின்றனர். மேலும் அறுவடை நேரத்தின் போது அறுவடை எந்திரங்களையும் வயல்வெளியில் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எகவே மின் வாரியத்துறை அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் சாய்ந்துள்ள மின் கம்பங்களையும், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்".

No comments:

Post a Comment

Post Top Ad