மானாமதுரை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் சூழ்ந்துள்ள மழைநீரை அப்புறப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மானாமதுரை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தொடர் மலையின் காரணமாக மழை நீர் வெளியேறி செல்வதற்கான வடிகால் உள்கட்டமை வசதி இல்லாததால் மழை நேரானது தெப்பம் போல் காட்சியளித்து சூழ்ந்துகொண்டதால் சிகிச்சையில் உள்ள உள்நோயாளிகள், சிகிச்சைக்கு வரும் புறநோயாளிகள், பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் நோய்தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 108 ஆம்புலன்ஸ் வாகனமானது அவசர சிகிச்சைக்கு மருத்துவ நோயாளிகளை பூண்டுள்ள மழை நீரில் கொண்டு சென்று ஏற்றி இறக்கும் அவல நிலை தொடர்கிறது. எனவே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், உடனடியாக மானாமதுரை அரசு பொது மருத்துவமனையில் சூழ்ந்துள்ள மழை நீருக்கான முறையான வடிகள்களை அமைத்து நோய் தொற்று அபாயத்தை தடுத்து, நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட மாவட்ட சுகாதாரத்துறை, உள்ளாட்சி நிர்வாகம், மானாமதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம் தலையிட்டு சீர் செய்திட நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

No comments:
Post a Comment