இளையான்குடி அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை, மூவர் கைது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கண்ணமங்கலத்தை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் சங்கர் என்பவர் வெட்டி கொலை. சங்கர் காரில் வந்து கொண்டிருந்தபோது, எதிரில் முத்துவேல் மற்றும் செல்வகுமார் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனத்தை ஏற்றுவது போல் சங்கர் சென்றதால் தகராறு ஏற்பட்டதை அடுத்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் முற்றியதில் சங்கர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதனை எடுத்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சங்கரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் தீவிர விசாரணையை அடுத்து தாயமங்கலத்தை சேர்ந்த முத்துவேல், செல்வகுமார் மற்றும் பிரேம்குமார் ஆகிய மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment