மானாமதுரை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 24 October 2025

மானாமதுரை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.


மானாமதுரை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த வெள்ளிக்குறிச்சியை சேர்ந்த முருகன் மகன் சிவபிரகாஷ் (22) என்பவர் வெள்ளிக்குறிச்சியில் இருந்து 23-ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தனது அம்மா மாலா மற்றும் அக்கா துர்கா தேவி ஆகியோருடன் TN 55 BK 1495 என்ற எண் கொண்ட ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் திருப்புவனம் நோக்கி நான்கு வழி சாலையில் உள்ள T.பாப்பாங்குளம் விளக்கு அருகே செல்லும்பொழுது, பாண்டி மகன் கிருஷ்ணன் என்பவர் TN 65 T 4668 என்ற எண் கொண்ட பொலிரோ பிக்அப் நான்கு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து வந்து வலது புறம் திரும்பும்போது இரு வாகனங்களும் விபத்துகுள்ளானது. அதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிவபிரகாஷை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 


மருத்துவமனையில் சிவபிரகாஷை பரிசோதித்த மருத்துவர்கள் சிவபிரகாஷ் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். மேலும் சிவபிரகாஷின் உடலானது பிரேத பரிசோதனைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனை சவக்கடங்கில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad