மருது பாண்டியர்களின் 224-வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக அமைச்சர்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியர்களின் 224-வது நினைவு தின அரசு விழாவை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையிலும், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த அமைச்சர் பொருள்கள் முன்னிலையிலும், மருது பாண்டியர்கள் திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பாக மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி நினைவு தினமானது அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment