மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காந்தி சிலை வளாகத்தில் உள்ள நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 156 ஆவது காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நகர் மன்ற உறுப்பினருமான திரு புருஷோத்தமன் அவர்களின் தலைமையிலும், வட்டாரத் தலைவர் காசி ராமலிங்கம் முன்னிலையிலும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி காந்தி ஜெயந்தி விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் மற்றும் ஊராட்சிகளில் உள்ள மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், சிறுபான்மைத்துறை காங்கிரஸ், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், சேவாதளம், எஸ்.சி/எஸ்.டி பிரிவு காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் கமிட்டிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment