புவனகிரி அருகே விவசாய பம்ப்செட்டுகளின் மின் மோட்டாரில் உள்ள காப்பர் ஒயர்கள் திருட்டு - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 October 2025

புவனகிரி அருகே விவசாய பம்ப்செட்டுகளின் மின் மோட்டாரில் உள்ள காப்பர் ஒயர்கள் திருட்டு


புவனகிரி அருகே விவசாய பம்ப்செட்டுகளின் மின் மோட்டாரில் உள்ள காப்பர் ஒயர்கள் திருட்டு.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகேயுள்ள தேவன்குடி கிராமத்தில் விவசாயிகள் பலர் போர்வெல் பாசனத்தை நம்பி பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேவன்குடி மற்றும்அதன் அருகில் உள்ள தரசூர் உள்ளிட்ட கிராமங்களில் நான்கு மோட்டார் பம்ப் செட்டுகளின்ஒயர்களை மர்ம நபர்கள் வெட்டி திருடிச் சென்றுள்ளனர். இதுபோல பீஸ்கேரியர்களையும் உடைத்து அதில் உள்ள காப்பர் கம்பிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.  சில நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள ஓடாக்க நல்லூர் கிராம பகுதியில் பல மின்மோட்டார்களில் இருந்து ஒயர்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்‌. தற்போது இதன் அருகில் உள்ள தேவன்குடி, தரசூர் உள்ளிட்ட பகுதி வயல்வெளிகளில் இருந்த போர்வெல்களில் செல்லும் ஒயர்களை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இதனால் சம்பா சாகுபடி நீர் பாய்ச்ச முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகிறது இதற்கு சரியான நடவடிக்கை எடுத்து இனி ஒரு முறை ஒயர்திருட்டு நடக்காதபடிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.


   தமிழக குரல் இணையதள செய்திக்காக... கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா செய்தியாளர் த.அம்பிகாபதி.

No comments:

Post a Comment

Post Top Ad