முதலமைச்சர் கோப்பை - 2025 விளையாட்டு போட்டிகளில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி அணிவினர் வெற்றி
சிவகங்கை மாவட்ட கல்லூரிகளுக்கு இடையிலான முதலமைச்சர் கோப்பை - 2025 விளையாட்டு போட்டிகளில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி அணியினர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுத்தொகையாக மொத்தம் ரூபாய் 2,14,000 பெற்று உள்ளனர். குறிப்பாக ஆண்கள் பிரிவில் பூப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, நீச்சல், சிலம்பம், கேரம். தடகளம் ஆகிய பிரிவுகளிலும் பெண்கள் பிரிவில் இறகுப்பந்து, நீச்சல். கிரிக்கெட், வாலிபால், மேஜை பந்து, பூப்பந்து, கைப்பந்து மற்றும் தடகளம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரி அணி வீரர், வீராங்கனைகளை கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி , உடற்கல்வி இயக்குநர் முனைவர் அசோக்குமார் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
No comments:
Post a Comment