அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்பு முளைப்பாரி உற்சவ விழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேலப்பசலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்பு 'சுந்தரவல்லி அய்யனார் கோவிலில்' "முளைப்பாரி உற்சவ விழா" , நடைபெற்றது.
ஆண்டுதோறும் கிராமத்தில் பொதுமக்களின் குறைகள் தீரவும், விவசாயம் செழிக்க மழை வேண்டி ஏழு நாட்களுக்கு முன்பு செவ்வாய்க்கிழமை முளைப்பாரி காப்பு கட்டி, விரதம் இருந்து, முளைப்பாரி ஓடுகளில் நவதானியங்களை விதைத்து, நன்றாக முளைத்தவுடன் கோயில் முன்பாக வைத்து ஏழு நாட்கள் கும்மி பாட்டு, ஒயிலாட்டம் என கொண்டாடி மகிழ்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள் ஏழு நாளும் விரதம் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு தெய்வத்திற்கு உணவுகளும் பரிமாறி, சுந்தரவல்லி அய்யனார் கோவிலில் பெண்கள் அனைவரும் மூன்று முதல் ஏழு வரை மற்றும் ஒன்பது சட்டி வரை, சட்டி சோறு எடுத்து சுந்தரவல்லி அய்யனார் கோயில் முன்பு படையல் வைத்து வணங்கி வருகின்றனர்.
தொடர்ச்சியாக புதன்கிழமை அன்று முளைப்பாரி ஓடுகளை சிறியவர், பெரியவர்கள், பெண்கள் என அனைவரும் தலையில் முளைப்பாரி ஓடுகளை தூக்கி விவசாயத்திற்கு சொந்தமான கண்மாயில் முளைப்பாரி ஓடுகளை கண்மாய் தண்ணீருக்குள் இறக்கியபடி சூரிய பகவான் திசையை நோக்கி கும்பிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment