உலக சுற்றுலா தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட இருமுறை மாநில விருது பெற்ற பிரஞ்சு மொழி ஆசிரியர் - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 September 2025

உலக சுற்றுலா தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட இருமுறை மாநில விருது பெற்ற பிரஞ்சு மொழி ஆசிரியர்

 


உலக சுற்றுலா தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட இருமுறை மாநில விருது பெற்ற பிரஞ்சு மொழி ஆசிரியர்.


1980ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடு சபை ஓவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27ஆம் நாள் உலகச் சுற்றுலா தினமாக அங்கீகரித்தது. "சுற்றுலா மற்றும் நிலையான உருமாற்றம்" என்ற கருப்பொருளில் 2025ஆம் ஆண்டிற்கான உலகச் சுற்றுலா தினம் சிறப்பிக்கப்படுகிறது. 


சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூகம் கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு குறித்த விழிப்புணர்வை பன்னாட்டு சமூகத்தினரிடையே வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் உலகச் சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.


கல்வி மற்றும் திறன்களில் முதலீடு செய்யும் தரமான சுற்றுலா பயிற்சி வழியாக நிலையான உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் வழியாக பசுமை மாற்றத்தை துரிதப்படுத்தல் வழியாக புதுமை தொழில் நுட்பத்தில் முதலீடு செய்வதன் வழியாக சுற்றுலாவின் பணியாளர்களை மேம்படுத்தக்கூடிய தொழில் முனைவோர் வழியாக சுற்றுலா தினத்திற்கு நாம் பங்களிக்க முடியும்.


ஆண்டு முழுவதும் உழைக்கின்றோம். உழைத்ததன் பயனைக் குடும்பத்தோடு கொண்டாடுவோம். சுற்றுலா சென்று ஆனந்தம் கொள்வோம். இல்லத்தில் இருப்பவர்களின் முகத்தில் இன்பம், குழந்தைகளின் முகத்தில் குதூகலம், பெரியோர்கள் மற்றும் நண்பர்கள் முகத்தில் பரவசம். ஆம்! சுற்றுலா அனைவருக்கும் ஆனந்தம் தரும். பார்த்து வந்த இடங்களைப் பட்டியல் போட்டு அசை போட்டுக் கொண்டே அடுத்தடுத்த தினங்களுக்கெல்லாம் அழகாய் செல்லும் மகிழ்ச்சியைக் காண்போம்.


துன்பம், கவலை மறந்து நாம் சுற்றிப் பார்க்கும் பறவை போல சுற்றுலா சென்று நாமும் சுகமாய் வருவோம். உலகின் மிகப்பெரிய துறையாக விளங்குவது நம் சுற்றுலாத்துறை தான். மிகப்பெரிய தொழில் சுற்றுலா போக்குவரத்துத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு, கேளிக்கை என ஐந்து துறைகளையும் சார்ந்து விளங்குகிறது. வளரும் நாடுகளில் மிகப்பெரிய பலம் சுற்றுலா தான்.


மேலும் இதுகுறித்து பிரெஞ்சு மொழி ஆசிரியரும் சுற்றுலா வழிகாட்டியும், சுற்றுலா வழிகாட்டிக்கான மாநில விருதை இருமுறை பெற்ற திரு மணிகண்டன் கூறுகையில், தமிழர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உலகளவில் கொண்டு சேர்ப்பது சுற்றுலாத்துறைக்கு உண்டு. தமிழகத்தின் பாரம்பரியத்தை அறிந்து கொள்ள உலகம் முழுவதிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.


குறிப்பாக சிவகங்கை மாவட்டம் முக்கிய சுற்றுலாத்தளமாக பிரமிக்க வைக்கும் செட்டிநாடு வீடுகள், கோவில்கள், கைத்தறி சேலைகள் கைவினைப் பொருட்கள் ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்பு, தமிழர்களின் பெருமை பேசும் கீழடி உட்பட பல சுற்றுலாத் தளங்கள் உண்டு. வரும் விருந்தினர்களை பாரம்பரிய செட்டிநாடு உணவுடன் உபசரிப்பதில் சிறந்து விளங்குகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad