தமிழக அரசின் செய்தித்துறை மீது பத்திரிகை செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அதிருப்தி.
தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகை ஒலிப்பதிவாளர்களை தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளாக வஞ்சித்து வருவதாக பரவாலான குற்றச்சாட்டு தற்போது வெளிப்படையாக அனைவரும் அறியும் வண்ணம் பேசப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.
அதாவது "ரிஜிஸ்டர் ஆப் நியூஸ் பேப்பர்" என்ற இந்திய அரசாங்கத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை (Accreditation Card) வழங்குவதிலும், இலவச பேருந்து பயண அட்டை வழங்குவதிலும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் ஆர்என்ஐ-யில் பதிவு செய்யப்பட்டு அனுமதி பெற்றாலும் கூட பத்தாயிரம் செய்தித்தாள்கள் அச்சிடப்பட்டால் தான் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தில் கேள்விகள் அச்சிடப்பட்டு, அவ்வாறு இல்லை என்றால் பத்தாயிரம் செய்து தாழ்மையுடன் அச்சிடப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக சிறு குரு பத்திரிக்கையை நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் செய்தியாளர்கள் மற்றும் வழிப்பறிவாளர்கள் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள பத்திரிகையாளர்களுக்கு அதிகபட்சமாக ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே இழப்பீடு, உதவித்தொகை வழங்கப்படுவதாகவும், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சியரின் உதவியாளர்கள் பத்திரிகையாளர்களிடம் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு சாதகமானவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை மட்டும் பஸ் பாஸ் வழங்கப்படுவதாகவும் அதிர்ச்சியான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக மாவட்ட செய்தியாளர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை மற்றும் பஸ் பாஸ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதனை விரிவுபடுத்தி தாலுகா செய்தியாளர்களுக்கும், தாலுகா ஒளிப்பதிவாளர்களுக்கும் அடையாள அட்டை மற்றும் பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்றும் இதுவரை நடைபெற்ற பல்வேறு பத்திரிகையாளர்கள் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றும், பத்திரிக்கையாளர்களின் நலனில் எந்த ஒரு திருப்திகரமான மேம்பட்ட நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டதும் இல்லை மேற்கொள்ளப் போவதும் இல்லை என்றும் தமிழகம் முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏதோ பெயரளவில் கண்துடைப்புக்காக பத்திரிக்கையாளர்களின் நலனில் அக்கறை செலுத்துவது போன்ற மாயை மட்டுமே அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று 21 ஆம் நூற்றாண்டின் இன்றைய நவீன டிஜிட்டல் உலகத்தில், உள்ளங்கை உலகத்திலும் கூட, நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் பிரதிகள் அச்சிட வேண்டும் என்பது அசாத்தியமான ஒன்று. மேலும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் ஒப்புகை பெற்ற செய்தி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணிபுரிந்து வரும் பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரையும் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களாக கருதி அடையாள அட்டை வழங்க அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னணி பத்திரிக்கை நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதும், அங்கீகார அட்டை குழுவினர் செயல்படுவதும் வருத்தம் அளிப்பது ஆகவும், அனைத்து செய்தி நிறுவனங்களையும் அனைத்து செய்தியாளர் அவர்களையும் சமமாக பாவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
தொடர்ந்து தமிழக அரசின் இத்தகைய வஞ்சிக்கத்தக்க நடவடிக்கையை எந்த ஒரு பத்திரிக்கையாளரும் ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை, இனிவரும் தேர்தல்களில் பத்திரிகையாளர்களின் நிலைப்பாடு என்பது தேர்தல் அரசியலில் மிகப்பெரிய தாகத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
No comments:
Post a Comment