சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாநில நல்லாசிரியர் விருது வழங்குவதில் பாரபட்சம்.
சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டுதோறும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தனியார் பள்ளிகளில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காரைக்குடியில் இரண்டு தனியார் பள்ளிகள் மட்டுமே மாறி மாறி விருது பெற்று வந்தன.
ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காரைக்குடியில் இயங்கி வரும் ஒரே ஒரு தனியார் பள்ளிக்கு மட்டுமே ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகின்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள், ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் காரைக்குடி இயங்கும் ஒரே ஒருபள்ளிக்கு மட்டும் தானா விருது மற்றவர்களுக்கு கிடையாதா? என்ற விரக்தியில் உள்ளனர்.
ஆண்டுதோறும் ஒரே ஒரு பள்ளிக்கு மட்டுமே விருது வழங்குவதன் ரகசியம் என்ன? பள்ளி கல்வித்துறை அதிகாரிகளா அல்லது அரசியல் வட்டாரமா அல்லது பணமா என அனைத்து ஆசிரிய பெருமக்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

 
 
No comments:
Post a Comment