மானாமதுரை இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை கைது செய்த காவல்துறை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள அன்னவாசல் கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரன் (20) கடந்த சனிக்கிழமையன்று சங்கமங்கலம் கிராமத்தில் மைக் செட் பணியிலிருந்தபோது அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட காளீஸ்வரன் உடலை வாங்க மறுத்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின்னர் உடலை வாங்கிச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து மானாமதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடும் என்று முன்னெச்சரிக்கையாக போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இக்குறிப்பிட்ட ஏழு குற்றவாளிகளும் சங்கமங்கலத்தில் ஏற்கனவே நடைபெற்ற கொலையின் தொடர்ச்சியாக பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆளை மாற்றி வெட்டி கொலை செய்ததில் காளீஸ்வரன் உயிரெழுந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவருகிறது. இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் உடனடியாக தற்போது ஏழு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இக்கொலை சம்பவத்தை தொடர்ந்து மேலும் எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில், கொலைக்கு தொடர்புடைய இரு தரப்பை சேர்ந்த கிராம பகுதியில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவது காவல்துறையினரின் கையில் தான் உள்ளது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

No comments:
Post a Comment