தேசிய அளவிலான போட்டியில் மானாமதுரை வெங்கடேஷா பள்ளி மாணவர்கள் அசத்தல் - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 September 2025

தேசிய அளவிலான போட்டியில் மானாமதுரை வெங்கடேஷா பள்ளி மாணவர்கள் அசத்தல்


தேசிய அளவிலான போட்டியில் மானாமதுரை வெங்கடேஷா பள்ளி மாணவர்கள் அசத்தல்.


'ரங்கோட்சவ் செலிபிரேஷன்' நடத்திய தேசியஅளவிலான ஆர்ட் மற்றும் வண்ணம் தீட்டல் போட்டியில் மானாமதுரை ஸ்ரீ வெங்கடேஷா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 124 பேர் பங்கேற்றனர். 


இதில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களில் ஓவிய போட்டியில் கிரிஷ்யா, தனிஷ்கா, மித்ரன், லோக்ஷணா, திஷ்ணுப்ரியன், பூங்காவியன், வர்ஷிதா, ஸ்ரீஹரன், ரியான்மேத்யூ, கேதர்நாத், வர்ஷித்தா ஆகிய 11 மாணவர்கள் தங்க பதக்கத்தையும், தீபப்பிரபா, தேவிகா, ஷிவானி, பவன் ஆதித்தியா, கிருஷ்ணிகா, தஸ்வந்திகா ஆகிய 6 மாணவர்கள் வெள்ளி பதக்கத்தையும், புவனிகா, கபிலன், முகமதுஹசிம், தீபக்சரண், உமேஷ்கூரி, வரஸ்ரீ பிரக்யா, சாய்ரக்சன், ஜெகதீஷ்குமார் ஆகிய 8 மாணவர்கள் வெண்கல பதக்கத்தையும் வென்றனர். 


படத்தொகுப்பை உருவாக்கும் போட்டியில் 5ம் வகுப்பை சேர்ந்த வர்ஷிதா தங்க பதக்கத்தையும், சிறப்பு பரிசையும் பெற்று அசத்தினார். விரல் மற்றும் கட்டைவிரல் பயன்படுத்தி வரையும் போட்டியில் 2 பேர் நிக்கிதாபொன்னி, மஹ்துன்ராணி ஆகிய 2 பேர் தங்க பதக்கத்தையும், காவியா, தனிஷ்கா ஆகிய 2 பேரும் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர். கையெழுத்து போட்டியில் கிருஷாந்த் தங்க பதக்கத்தையும், நூருல்லஷீரா, முகில்வேந்தன் ஆகிய 2 பேர் வெள்ளி பதக்கத்தையும் பெற்றனர். 


முகமூடி தயாரிக்கும் போட்டியில் மாணவன் தர்மேஷ் வெண்கல பதக்கத்தை பெற்று அசத்தினார். பல்வேறு மாநிலங்களிலிருந்து கலந்துகொண்ட மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டிகளில் மானாமதுரை வெங்கடேஷா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சிறந்த பள்ளிக்கான பரிசையும் பெற்று அசத்தியுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற 33 மாணவர்கள் அடுத்ததாக கென்யா மற்றும் பூட்டன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள இன்டர்நேஷனல் அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சிறப்பாக வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை பள்ளியின் தாளாளர் திரு ராஜ்குமார் கணேசன் வழங்கி கௌரவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad