முதலமைச்சர் கோப்பை சிலம்ப போட்டியில் அதிக பதக்கங்கள் வென்று மானாமதுரை வீரவிதை சிலம்ப அணி சாதனை.
சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை சிலம்ப போட்டியில் அதிக பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றுள்ளது வீரவிதை சிலம்ப அணி.
கல்லூரிக்கான 55-65 எடை பிரிவில் சிவா முதல் இடத்தையும், 40-50 பெண்கள் எடை பிரிவில் தாட்சாயிணி மூன்றாம் இடத்தையும், பள்ளிக்கூட ஆண்கள் பிரிவில் 75க்கு மேல் எடை பிரிவில் மன்னர் சிவா முதல் இடத்தையும், 45-55 எடை பிரிவில் திருகார்த்திக் இரண்டாம் இடத்தையும், 65-75 எடை பிரிவில் ஜிஷ்ணு இரண்டாம் இடத்தையும், பெண்கள் 60-70 எடை பிரிவில் ஜெயஸ்ரீ முதல் இடத்தையும் பெற்று அகாடமிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
இதில் முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். இரண்டாவது முறையாக அதிக பதக்கங்களை வென்று சிவகங்கை மாவட்டத்தில் முதலிடம் பெற்றது வீரவிதை சிலம்ப அணி. இதற்கு பயிற்சியளித்த மாஸ்டர் கலைவளர் மணி டாக்டர் பெருமாளையும், வெற்றி பெற்ற மாணவர்களையும் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

No comments:
Post a Comment