சிவகங்கை மாவட்ட வேளாண்மை விற்பனை & வணிகத்துறை மூலம் வெட்டிவோ் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் சென்னையில் காட்சி படுத்தப்பட்டது.
சென்னை நந்தபாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் அமைச்சர்கள் மற்றும் வேளாண்மை துறை ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்ற "வேளாண் வணிக திருவிழா 2025ல்" தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் வேளாண் கண்காட்சி அரங்கத்தினை திறந்து வைத்து, வேளாண் பெருமக்களுக்கு ரூபாய் 1.78 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேருரை ஆற்றினார்.
நடைபெற்ற இந்த வேளாண் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் 300 வகையான வேளாண் விளைபொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், சிவகங்கை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் வெட்டிவோ் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் காட்சி படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வேளாண் வணிக கண்காட்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் அவா்கள் வெட்டிவோ் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பாா்வையிட்டாா்.
இந்நிகழ்வின்போது சிவகங்கை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநா், வேளாண்மை அலுவலா்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா்கள் உடன் இருந்தனர்.
மேலும் இந்த வேளாண் வணிக திருவிழாவில் வேளாண் வணிக கண்காட்சியை தொடர்ந்து, வேளாண் சார்ந்த கருத்தரங்கங்களும் நடைபெற்றது.
No comments:
Post a Comment