'மண்ணும் பொன்னாகும்', 'மண்பாண்ட பொருட்களின் ராஜா'- நமது பெருமைமிது மானாமதுரை.
உலகளவில் பிரசித்தி பெற்ற மானாமதுரை மண்பாண்ட பொருட்கள் 'மண்ணும் பொன்னாகும்' என்ற பழமொழிக்கேற்ப மானாமதுரையில் மண்ணால் தயாரிக்கக்கூடிய மண்பாண்ட பொருட்கள் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது.
மண்பாண்ட பொருட்கள் என்றால் மானாமதுரை, மானாமதுரை என்றால் மண்பாண்ட பொருட்கள் என்ற அளவிற்கு மிகவும் பிரபலமாக உள்ள மானாமதுரை மண்பாண்ட பொருட்கள் இசை உலகிலும் மிகவும் இன்றி அமையாத இசை கருவியான கடம் மானாமதுரையில் தயாரிக்கப்படுவது கூடுதல் சிறப்பாக உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தார் போல் மண்பாண்ட பொருள்களை தயார் செய்து வருகின்றனர்.
பொங்கல் சீசனின் போது மக்கள் புத்தாடை உடுத்தி அறுவடை செய்த புதிய அரிசியில் புதிய மண்பானையில் பொங்கல் வைப்பதற்காக மானாமதுரையில் வருடம் தோறும் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் திருக்கார்த்திகை விழாவிற்காக தூற்றுக்கு மேற்பட்ட வகைகளில் விளக்குகள் தயார் செய்யப்படுகிறது.
அதேப்போன்று விநாயகர் சதுர்த்தியின் போது ரூபாய் 10 முதல் ரூபாய் 10 ஆயிரம் வரையிலான களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும் ஆயிரக்கணக்கில் தயார் செய்யப்பட்டு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இதேபோன்று அனைத்து பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்காக மானாமதுரையில் வருடம் தோறும் மண்பாண்ட பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
அக்டோபர் 17ஆம் தேதி துவங்க உள்ள நவராத்திரி விழாவிற்காக சுவாமி சிலைகள், திருப்பதி பிரம்மோற்ஸவ சிலைகள், அத்திவரதர் சிலை, அர்த்தநாரீஸ்வரர், சங்கரநாராயணன், அழகர் சுவாமி, மீனாட்சி சுந்தரரேஸ்வரர், தலைவர்கள், தியாகிகள் சிலைகள், பறவைகள் மற்றும் விலங்கு பொம்மைகள், ஆண்டாள் பொம்மைகள் என கொலுவில் வைக்கப்படும். அனைத்து பொம்மைகளும் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பொம்மைகள் தயார் செய்யப்பட்டு, மானாமதுரை மண்பாண்டகூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதனை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்து வாங்கி சென்று வீடுகளிலும், கோயில்களிலும் கொலு வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இதைபோன்று இயற்கையோடு ஒன்றிப்போன தமிழர்களின் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் மானாமதுரை மண்பாண்ட பொருட்கள் ஒன்றி போனதை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
இத்தனை சிறப்பு வாய்ந்த மானாமதுரை மண்பாண்ட பொருட்களை சமையலிலும் பொதுமக்களுக்கு மிகவும் இன்றிய அமையாதாக விளங்கி வருகிறது. மனமார்ந்த பொருட்களினால் செய்யப்படும் சமையல்களில் கெமிக்கல் ரியாக்சன் இல்லாத காரணத்தினால், இதில் சமைக்கப்படும் உணவுகள் மிகவும் ருசியாகவும், தரமாகவும், உடல் நலத்திற்கு அதிக நன்மை இருப்பதினால், ஏராளமான டாக்டர்கள் மண்பாண்ட சமையலுக்கு பரிந்துரை செய்வதினால் தற்போது பெரும்பாலான ஓட்டல்களில் மண்பாண்ட சமையல் பிரபலமாகி வருவதால், ஏராளமானோர் மண்பாண்ட சமையலுக்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment