சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா மேலப்பசலை பஞ்சாயத்திற்குட்பட்ட அரிமண்டபம் கிராமத்தில் கிராம பொதுமக்களுக்கான தகன மேடை அமைத்து தரப்படாததால் கிராம பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாய் வருகின்றனர். தற்போது மழை காலம் தொடங்கி உள்ளதால் அனைவரும் மழையில் நனைந்தபடி, இடி மின்னலை பொருட்படுத்தாமல், குடையைப் பிடித்துக் கொண்டு தங்கள் உறவினர்களுக்கு ஈமக்கிரியை மற்றும் உடல்களை தகன மேற்கொள்ளும் காரியங்களை பாதுகாப்பற்ற சூழலில் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள சிறிய தகன மேடைகளில் சிலவற்றை மாடு கண்றுகளை கட்டி போடும் இடமாகவும், சில தகன மேடைகள் பழுதடைந்தும், சில தகன மேடைகள் அக்கம் பக்கத்தில் குடியிருப்பு பகுதிகள் அடர்த்தியாக உள்ளதால் பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாமலும் இருந்து வரும் சூழலை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. எனவே அரிமண்டபம் கிராம பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளுள் ஒன்றான தகனமேடை அமைத்து தர வேண்டி கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தையும் உள்ளாட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தினர்.
Post Top Ad
Friday, 12 September 2025
Home
சிவகங்கை
மழையில் நனைந்தபடி பாதுகாப்பாற்ற முறையில் உடல்களை தகனம் செய்யும் கிராம பொதுமக்கள், தகன மேடை அமைத்துத் தர வலியுறுத்தல்
மழையில் நனைந்தபடி பாதுகாப்பாற்ற முறையில் உடல்களை தகனம் செய்யும் கிராம பொதுமக்கள், தகன மேடை அமைத்துத் தர வலியுறுத்தல்
Tags
# சிவகங்கை
About SUB EDITOR THAMILAGA KURAL
சிவகங்கை
Tags
சிவகங்கை
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - சிவகங்கை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், சிவகங்கை மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment