முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 10000 வழங்கிய சிவகங்கை மாவட்ட அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தினர்.
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பில், அதன் தேசியத் தலைவர் எஸ். இராஜேந்திரன் ரூபாய் ஐந்தாயிரமும், சிவகங்கை மாவட்ட சங்கத்தின் சார்பில் ரூபாய் ஐந்தாயிரமும் ஆக மொத்தம் ரூ.10,000 தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியமைக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிய அலுவலகத்திலிருந்து, அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட அலுவலகத்திற்கு அஞ்சல்மூலம் அனுப்பிவைக்கப்பட்ட இரசீதினை, சிவகங்கை அலுவலகப் பொறுப்பாளரும், செயற்குழு உறுப்பினருமான ஆனந்த், சிவகங்கை மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் முத்துவேல் ஆகிய இருவர் முன்னிலையில் வழங்க, மாவட்டச் செயலாளர் ரவி இரசீதை பெற்றுக்கொண்டார்.

No comments:
Post a Comment