மானாமதுரையில் உள்ள தனியார் பள்ளியில் "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் பள்ளியான செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக் பள்ளியில் தமிழக அரசின் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை நடத்தும் "நலம் காக்கும் ஸ்டாலின்" பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் செப்டம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு, மகப்பேறு, குழந்தை நலம், இருதய நோய், நரம்பியல், தோல் நோய், கண் பரிசோதனை, பல், காது, மூக்கு, தொண்டை, மனநலம், முடநீக்கு இயல் நோய், நெஞ்சகநோய், நீரிழிவு, சித்த மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கான சிகிச்சை அறிவுரைகள், பரிசோதனைகள் மற்றும் நோயின் காரணம் ஆராய்ந்து அதை தணிக்கும் வலியையும் ஆராய்ந்து உடலுக்கு பொருந்தும் படியான சிகிச்சைக்கான பரிந்துரைகள் வழங்கப்பட்ட இருக்கிறது.
மேலும் இம்முகாமில் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் நோயின் ஆரம்பநிலையை கண்டறிந்ததோடு தற்காலிக சிகிச்சைகளும், தேவைப்படுவோருக்கு மேல் சிகிச்சைக்கான பரிந்துரைகளும் வழங்கப்பட்ட உள்ளது.
எனவே இம்முகாமினை மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இளைஞர், இளம் பெண்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டவர் முகாமினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment