அமைச்சரிடம் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற வீரவிதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் அறக்கட்டளை மாணவர்கள்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2026 ஆம் ஆண்டிற்கான பரிசு வழங்கும் விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மானாமதுரையில் இயங்கி வரும் வீரவிதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் அறக்கட்டளையை சேர்ந்த மாணவர்கள் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்களுக்கு பயிற்சியாளர் மாஸ்டர் கலைவளர்மணி கே. பெருமாள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:
Post a Comment