மனமதுரை நகராட்சி வார சந்தை பகுதிகளில் அச்சுறுத்தி வரும் மாடுகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தல்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று வார சந்தை நடைபெறுவது வழக்கம். இக்குறிப்புட்ட நாளில் நடைபெறும் வார சந்தை பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் மாடுகள் நடமாடுவதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். குறிப்பாக சந்தை நடைபெறும் இடத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், வியாபாரிகள் மாடுகளின் அச்சுறுத்தல் காரணமாக பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் வார சந்தையில் வியாபாரத்திற்காக வைக்கப்பட்டுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை மாடுகள் உண்பதால் வியாபாரிகள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாய் வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குறைந்தபட்சம் வார சந்தை நடைபெறும் நாட்களிலாவது மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வார சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

No comments:
Post a Comment