காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் கலைத் திருவிழாவின் தொடக்க விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறையின் ஆணைக்கிணங்க மூன்று நாட்கள் நடைபெறும் கல்லூரி கலைத் திருவிழாவின் தொடக்க விழா இன்று கல்லூரியின் உமையாள் கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி தலைமை வகித்து கலைத் திருவிழாவின் நோக்கம் குறித்தும், இதனால் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்கிக் கூறினார். கல்லூரியின் வரலாற்றுத் துறை தலைவர் முனைவர் நிலோபர் பேகம் வரவேற்புரை ஆற்றினார். கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் சந்திரசேகரன், தமிழ் துறைத் தலைவர் முனைவர் சிதம்பரம், தமிழ் துறை இணைப் பேராசிரியர் முனைவர் குமார், விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் போதகுரு ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழ் துறை இணைப்பேராசிரியர் முனைவர் செல்வமீனா நன்றி கூறினார். தமிழ் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் அனிதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பேராசிரியர்களும், மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர். அதன் பின் தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையின் ஆணைக்கிணங்க மாணவ மாணவிகளுக்கு பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

No comments:
Post a Comment