சிவகங்கை மாவட்டத்தில் 3ஆம் தேதி முதல் தொடர்ந்து 28 நாட்களுக்கு தோல்கழலை நோய்க்கான கால்நடை தடுப்பூசிகள் போடப்படவுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 100000 மாட்டினங்களுக்கு தோல்கழலை நோய் வராமல் தடுக்கும் பொருட்டு இலவசமாக தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக 03.09.2025 முதல் தொடர்ந்து 28 நாட்களுக்கு நடைபெறவுள்ளது, மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போடப்படவுள்ளது.
இதற்காக 57 கால்நடை மருத்துவ குழுக்கள் உருவாக்கப்பட்டு தினந்தோறும் ஒரு குழுவானது 100 கால்நடைகள் வீதம் தடுப்பூசி போட பணிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு மாத கன்றுகள் முதல் சினைமாடுகள் தவிர அனைத்து வயதுடைய மாட்டினங்களுக்கும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள கால்நடை வளர்ப்போர் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எனவே கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தோல் கழலை நோயிலிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

 
 
No comments:
Post a Comment