வருகின்ற 26 & 27-ஆம் தேதி காரைக்குடியில் உள்ள 'மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தின்' "திறப்பு தினம்" அனுசரிக்கப்பட உள்ளது.
தெற்கு ஆசியாவிலேயே மிகமுக்கியமான ஆய்வகங்களில் ஒன்றான தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள இந்திய அரசின் நிறுவனமான "மத்திய மின்வேதியியல் ஆய்வகம்" (Central Electro Chemical Research Institute) இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது ஆண்டுதோறும் பொதுமக்களின் பார்வைக்காக "திறப்பு தினம்" கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் "திறப்பு தினம்" (Open day) எதிர்வரும் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) அனுசரிக்கப்பட இருக்கின்றது.
கடந்த ஆண்டு முடிய ஒரு நாள் மட்டுமே திறப்பு தினம் நடைபெற்று வந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களின் வசதிக்காக இந்த ஆண்டு திறப்பு தினமானது இரண்டு நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி சிக்ரியின் (CECRI) செயல்பாடுகளை, ஆராய்ச்சிகளை, ஆராய்ச்சி கூடங்களை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ள அந்நிறுவனமானது பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:
Post a Comment