மானாமதுரை சிப்காட்டில் தொடங்கப்படவுள்ள மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு, அதிமுகவினர் போராட்டம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 September 2025

மானாமதுரை சிப்காட்டில் தொடங்கப்படவுள்ள மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு, அதிமுகவினர் போராட்டம்.


மானாமதுரை சிப்காட்டில் தொடங்கப்படவுள்ள மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு, அதிமுகவினர் போராட்டம். 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொடங்கப்பட உள்ள மருத்துவ சுத்திகரிப்பு ஆலைக்கு நிரந்தர தடை விதிக்க கோரியும், மானாமதுரை பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்தும், முன்னாள் முதல்வரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில், மானாமதுரை அஇஅதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர்கள் ராஜன் செல்லப்பா, பாஸ்கரன் மற்றும் சிவகங்கை அதிமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி. ஆர். செந்தில்நாதன் ஆகியோரின் தலைமையிலும், நகர் கழக செயலாளர் விஜி. போஸ், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது. 


இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளருமான மாரிமுத்து, கழக வழக்கறிஞர் சுரேஷ்பாபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜ், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி மற்றும் கிளைகளை சேர்ந்த அஇஅதிமுக கட்சி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, இலக்கிய அணி, அண்ணா தொழிற்சங்கம், அம்மா பேரவை, எம்ஜிஆர் மன்றம் உள்ளிட்ட அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 


மேலும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று தொடங்கப்பட இருந்த இந்த மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16ஆம் தேதி வியாபாரிகள் சங்கம், அனைத்து கட்சியினர், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கடையடைப்பு மற்றும் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு, மருத்துவக் கழிவு ஆலையை முற்றுகையிட சென்றபோது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்டோர் போராட்ட குழுவினரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, மருத்துவக் கழிவு ஆலையை நிரந்தரமாக தடை செய்ய தமிழ்நாடு அரசிற்கு பரிந்துரைத்து, தமிழ்நாடு அரசின் உத்தரவு பெறுவதற்கான கால அவகாசம் வேண்டி எழுத்துப் பூர்வமாக அறிவித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad