பன்னாட்டுக் கருத்தரங்கில் பரிசுகளை வென்ற அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 September 2025

பன்னாட்டுக் கருத்தரங்கில் பரிசுகளை வென்ற அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்.


பன்னாட்டுக் கருத்தரங்கில் பரிசுகளை வென்ற அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்.


பன்னாட்டுக் கருத்தரங்கில் பரிசுகளை வென்ற அழகப்பா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் வசந்தி பாராட்டினார்.


இராமநாதபுரம் சேதுபதி அரசுக் கல்லூரியின் இயற்பியல் துறை மற்றும் திருச்சி இராமன் ஆய்வு அறக்கட்டளை சார்பில் நானோ அளவிலான பொருட்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் 18.09.2025  அன்று பன்னாட்டுக் கருத்தரங்கம்  நடைபெற்றது.  இக்கருத்தரங்கில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் கருணாகரன் கருத்தாளராக கலந்து கொண்டு நானோ தொழில்நுட்பம் பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் பேசினார். இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்களும் மாணவ, மாணவிகளும் தங்கள் ஆய்வுகளை சுவரொட்டியாகவும், வாய்மொழியாகவும் விளக்கினர். இவ்விரு பிரிவுகளில் சிறந்த கட்டுரைகள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. அதில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி ஆய்வு மாணவிகள் கணேஷ்வரி மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் ஆய்வாளர்களுக்கான வாய்மொழி கட்டுரை சமர்ப்பித்தல் பிரிவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களையும், மாணவர்களுக்கான போட்டிகளில் இளநிலை இயற்பியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஹர்ஷினி, மணி, விஷால் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்து, மொத்தம் ஐந்து பரிசுகளைப் பெற்றனர். கருத்தரங்கத்தில் பங்கேற்றவர்களையும், பரிசு பெற்றவர்களையும் கல்லூரி முதல்வர் முனைவர் வசந்தி பாராட்டினார். 

 

மேலும் இக்கருத்தரங்கில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் கருணாகரன், பிற கல்லூரிகளில் பணியாற்றும்  பேராசிரியர்கள் ஹெலன்,  சந்திரமோகன், மகாலிங்கம் ஆகியோருடன் இணைந்து  "Introduction to Analog Electronics"  என்ற நூலை எழுதி வெளியிட்டமைக்காக


முதல்வர் வசந்தி மற்றும் துறைத் தலைவர் கவிதா ஆகியோர் அவரைப்  பாராட்டி வாழ்த்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad