காரைக்குடி எஸ்.ஆர் பயிற்சி நிறுவனத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கான இலவச திறன் பயிற்சி.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எஸ்.ஆர் பயிற்சி நிறுவனத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கான திறன் பயிற்சி வரும் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் இணைந்து கொள்ள விருப்பமுடைய பயனாளிகள் தாங்கள் நேரடியாக சென்று தங்களது ஆதார் கார்டு, ரேஷன் அட்டை நகல் மற்றும் வங்கி பாஸ் புத்தகங்கள் போட்டோ ஆகியவை கொடுத்து முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இப்பயிற்சியில் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி நிறைவு செய்தவுடன் தமிழக அரசின் திறன் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நிறைவடையும் வரை பயனாளிகளுக்கான உதவித்தொகையை பெற்றுக் கொள்ளும் வசதியும், பயிற்சி நிறைவு செய்தவுடன் பயனாளிகளுக்கான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் தொழில் முனைவோராகவும் பதிவு செய்து, தொழில் செய்து வளர்ச்சி பெறுவதற்கான உதவிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment