மானாமதுரையில் பட்டப்பகலில் 21 வயது இளைஞர் வெட்டிக் கொலை, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறை? பொதுமக்கள் கேள்வி - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 September 2025

மானாமதுரையில் பட்டப்பகலில் 21 வயது இளைஞர் வெட்டிக் கொலை, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறை? பொதுமக்கள் கேள்வி

 


மானாமதுரையில் பட்டப்பகலில் 21 வயது இளைஞர் வெட்டிக் கொலை, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறை? பொதுமக்கள் கேள்வி 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் அன்னவாசல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் காளீஸ்வரன் (21). இவர் சங்கமங்கலம் கிராமத்தில் மைக் செட் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத சுமார் 10 மர்ம நபர்கள் காளீஸ்வரனை சரமாரியாக வெட்டியதில் காளீஸ்வரன் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காளீஸ்வரனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோது, காளீஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பட்ட பகலில் இளம் வயது இளைஞரை அறிவாளால் வெட்டி சம்பவம் மானாமதுரை பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் கொலையாளிகள் வெட்ட வந்த நபர் வேறொருவர் என்பதும், காளீஸ்வரனை ஆள் மாற்றி வெட்டியதாகவும், காளீஸ்வரனுக்கும் கொலையாளிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும், வெட்டிய மர்ம நபர்கள் கீழப்பசலை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வருகிறது. மேலும் காளீஸ்வரனின் உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மானாமதுரை டி1 காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிப்பதற்கான தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கொலையாளிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க கிராம பொதுமக்கள் மானாமதுரை காவல்துறையினரை வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad