போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை குறைக்க அல்லது ரத்து செய்ய செப்டம்பர் 13 ஆம் தேதி வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதங்களால் அவதிப்படும் வாகன ஓட்டிகளுக்கு "லோக் அதாலத்" சிறிய முதல் பெரிய அபராதங்களை குறைந்த செலவில் தீர்க்க அல்லது அவற்றை ரத்து செய்ய ஒரு வாய்ப்பை வழங்க உள்ளது.
இந்த வாய்ப்பானது செப்டம்பர் 13ஆம் தேதி சனிக்கிழமையன்று வழங்கப்பட உள்ளது. தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களுக்கு முழுமையாக தள்ளுபடி பெறலாம் அல்லது 50% வரை குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், சில கடுமையான போக்குவரத்து மீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மீது விதிக்கப்பட்ட அபராதம் பரிசீலிக்கப்படாது என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.
தள்ளுபடி பெற தகுதியான சிறிய போக்குவரத்து விதிமீறல்கள் பின்வருமாறு, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ரெட் சிக்னலை மீறுதல், தவறாக வழங்கப்பட்ட சலான், அதிக வேகம், பி.யூ.சி சான்றிதழ் இல்லாதது, நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனத்தை நிறுத்துதல், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், வாகன தகுதிச் சான்றிதழ் வைத்திருக்காதது, தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து சிக்னல்களைப் புறக்கணித்தல், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற சிறிய அளவிலான போக்குவரத்து விதிமீறல்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படலாம் அல்லது மிக குறைந்த தொகையை செலுத்தி வழக்கை முடித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த சலுகை வாய்ப்பை பயன்படுத்தி வாகன ஓட்டிகள் போக்குவரத்து துறையால் விதிக்கப்பட்ட அபதாரங்களை குறைத்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment